



Agrakaram – அக்ரகாரம் (Achyranthes aspera)
₹35.00 – ₹140.00
பல் பிரச்சனைகள் தீரும்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
காய்ச்சலை கட்டுபடுத்தும்
அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.
தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.
குரலின் இனிமை கூடும்
அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.
மயக்கத்தை போக்கும்
திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.
மலச்சிக்கலை தீர்க்கும்
நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.
வாய் பிரச்சனைகளை தீர்க்கும்
சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்
Weight | N/A |
---|---|
Size |
100 gm, 25 gm, 50 gm |
Reviews
There are no reviews yet.